இத்தாலியில் பயங்கரம்! பனிச்சரிவில் புதைந்த ஹொட்டல்:
இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர் பனிச்சரிவில் ஹொட்டல் ஒன்று முழுவதுமாக புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Abruzzo மாகாணத்தில், Pescara பகுதியில் உள்ள Rigopiano என்னும் ஹொட்டலே இவ்வாறு புதைந்துள்ளது.
சம்பவத்தின் போது ஹொட்டல் உள்ளே ஊழியர்கள், விருந்தினர்கள் என 30 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. குறித்து ஹொட்டல் பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி தங்கும் இடம் என கூறப்படுகிறது.
இத்தாலியில் புதன்க்கிழமை நான்கு மணிநேர இடைவெளியில் நான்கு முறை நிலநடுக்கம் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பனியில் புதைந்த சிக்கி தவித்த நபர் ஒருவர் மீட்புக்குழுவினருக்கு போன் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, 20 தீயணைப்பு வீரர்கள், இரண்டு மலை மீட்பு குழுவினர், ஆறு ஆம்புலன்ஸ் மற்றும் உள்ளுர் பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.
எனினும், சாலை முழுவதும் பனியில் முடியிருந்ததால் மீட்புக்குழுவினர் பல மணி நேரத்திற்கு பிறகே சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பனிச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
