இணையத்தள ஊடுருவல் அச்சுறுத்தல் காரணமாக எலக்ரோனிக் வருமான வரி தாக்கலை CRA அகற்றுகின்றது!
ஒட்டாவா-தங்கள் வருமானவரி தாக்கலை இணையத்தளம் ஊடாக தாக்கல் செய்ய திட்டமிட்டிருக்கும் கனடியர்கள் சிரமங்களை எதிர் கொள்ள நேரிடும் என கருதப்படுகின்றது. கனடா வருமானவரி ஏஜன்சியின் இணையத்தள ஊடுருவல் அச்சுறுத்தல் காரணமாக திணைக்களம் குறிப்பிட்ட இச்சேவையை காலவரையறையின்றி அகற்றுகின்றாத தெரியவந்துள்ளது.
ஒரு இணைய பாதிப்பு கண்டறியப்பட்டதால் ஏஜன்சியின் இணையத்தளம் மின்னணு வரி தாக்கல் உட்பட்ட அதன் பல சேவைகளை அகற்றுகின்றதென நிறுவனத்தின் வலைத்தளத்தில் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
“My Account,” “My Business Account,” “Netfile,” “EFILE” and “Auto-Fill My Return.” ஆகிய சேவைகளும் இதற்குள் அடங்குகின்றன.
மக்கள் தங்கள் பத்திரங்களை பூர்த்தி செய்யலாம் ஆனால் தாக்கல் செய்ய காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றது.
கனடியர்களின் வரித்தகவல்களை பாதுகாக்க ஒரு முன்னெச்சரிக்கையாக வெள்ளிக்கிழமை இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கனடா வருமான வரி திணைக்கள பேச்சாரளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் எதுவும் பாதிக்கப்பட்டதாக வருமானவரி திணைக்களம் அறியவில்லை எனவும் தெரிவித்த அவர் ஆனால் நிறுவனம் நிலைமையை கண்காணிக்கும் எனவும் தெரிவித்தார். பாதுகாப்பிற்கு ஆபத்து இல்லை என தீர்மானிக்கும் வரை நிலைமை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.