Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக மகஜர் கையளிப்பு

June 25, 2020
in News, Politics, World
0

தங்களது நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்கள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று மகஜர் ஒன்றினை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், “நல்லாட்சி அரசாங்கம் 27.03.2019 அன்று எடுத்த அமைச்சரவை முடிவின்படி (எண்: 19/0888/105 / 015-1),தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகங்கள் மூலம் மேற்கூறிய பதவிக்கு விண்ணப்பங்கோரி வர்த்தமானி வெளியிடப்பட்டது.

பிற்காலத்தில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே இரண்டு நேர்காணல்கள் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றன. பின்னர் 2019 அன்று 6547 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டதுடன், நியமிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டது, மேலும் நியமிக்கப்பட்டவர்கள் தங்களது கடமைகளை தமது தொடர்புடைய அலுவலகங்களில் ஏற்றுக்கொண்டனர்.

இந்தச் சூழலில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதுடன், நியமனத்தை இடைநிறுத்திய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் 23.09.2019 அன்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் தொலைநகலில் அனுப்பப்பட்டது.

மேற்கண்ட நியமனங்கள் 16.09.2019 அன்று வழங்கப்பட்டன என்பதையும், தேர்தலுக்கான திகதி 18.09.2019என்று அறிவிக்கப்பட்டதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நியமனங்களை மீட்டெடுக்கும் சுற்றறிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொலைநகலில் அனுப்பப்பட்டது.

நாங்கள் 18.11.2019 அன்று மாவட்ட செயலகங்களில் எங்கள் கடமைகளை ஏற்கச் சென்றபோது, அத்தகைய மேலதிக தகவல்கள் அவர்களால் வழங்கப்படவில்லை என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், எங்கள் நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் மேற்கண்ட நியமனத்தை மீட்டெடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும், இது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

சுமார் எட்டு மாதங்களாக நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம். இதன் விளைவாக, நாமும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம், வாழ்வாதார இழப்பு காரணமாக கடுமையான துயரங்களுக்கு ஆளாகியுள்ளோம்.

ஆகையால், எங்கள் குறைகளை தயவுசெய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிற்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்வதோடு, எமது செயற்திட்ட உதவியாளர் நியமனம் குறித்து ஆவனம் செய்யும் படி, வவுனியா மாவட்ட செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்“ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

கிருலப்பனை பொல்ஹென்கொட இராணுவ முகாமின் சிப்பாய் தற்கொலை

Next Post

யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகர் பதவி நீக்கம்

Next Post

யாழ்.மாநகர சபையின் சட்ட ஆலோசகர் பதவி நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures