Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான வெற்றி

June 22, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான வெற்றி

பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஏஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தை 2 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்ததுடன் 2023 – 2025 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான முதலாவது வெற்றிப் புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (20) காலை பெய்த மழை காரணமாக முதலாவது ஆட்ட நேர பகுதி கைவிடப்பட்டது.

பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் அவுஸ்திரேலியா தனது 2ஆவது இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்தது.

மொத்த எண்ணிக்கை 121 ஓட்டங்களாக இருந்தபோது இராக்காப்பாளன் ஸ்கொட் போலண்டும் மொத்த எண்ணிக்கை 143 ஓட்டங்களாக இருந்தபோது ட்ரவிஸ் ஹெட்டும ஆட்டம் இழந்தனர்.

தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலியா சற்று பலம்வாய்ந்த நிலையில் இருந்தது. கவாஜா 56 ஓட்டங்களுடனும் கெமரன் க்றீன் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதன் காரணமாக அவுஸ்திரேலியா இலகுவான வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கெமரன் க்றீன் ஆட்டம் இழந்தார். (192 – 6 விக்.)

மறுபக்கத்தில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த உஸ்மான் கவாஜா, பென் ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் இன்சைட் எஜ் மூலம் போல்ட் ஆனார். (209 – 7 விக்.)

எட்டாவதாக அலெக்ஸ் கேரி ஆட்டம் இழந்தபோது அவுஸ்திரேலியா 227 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

இந் நிலையில் பெட் கமின்ஸ், நெதன் லயன் ஆகிய இருவரும் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு பரபரப்பான 2 விக்கெட் வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: 393 – 8 விக். டிக்ளயார்ட் (ஜோ ரூட் 118 ஆ.இ., ஜொனி பெயாஸ்டோவ் 78, ஸக் க்ரோவ்லி 61, நெதன் லயன் 149 – 4 விக், ஜொஷ் ஹேஸ்ல்வூட் 61 – 2 விக்.)

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 386 (உஸ்மான் கவாஜா 141, அலெக்ஸ் கேரி 66, ட்ரவிஸ் ஹெட் 50, கெமரன் க்றீன் 38, பெட் கமின்ஸ் 38, ஒல்லி ரொபின்சன் 55 – 3 விக்., ஸ்டுவர்ட் ப்றோட் 68 – 3 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: 273 (ஜோ ரூட் 46, ஹெரி ப்றூக 46, பென் ஸ்டோக்ஸ் 43, ஒல்லி ரொபின்சன் 27, பெட் கமின்ஸ் 63 – 4 விக்., நெதன் லயன் 80 – 4 விக்.)

அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 281 ஓட்டங்கள்) 282 – 8 விக். (உஸ்மான் கவாஜா 65, பெட் கமின்ஸ் 44 ஆ.இ., டேவிட் வோர்னர் 36, கெமரன் க்றீன் 28, ஸ்கொட் போலண்ட் 28, அலெக்ஸ் கேரி 20, நெதன் லயன் 16 ஆ.இ., ஸ்டுவர்ட் ப்றோட் 64 – 3 விக்., ஒல்லி ரொபின்சன் 43 – 2 விக்.)

Previous Post

நான் இந்திய பிரதமர் மோடியின் ரசிகன் ” | எலான் மஸ்க்

Next Post

ஊடக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் நாமல் | சமூக ஊடகத்தில் கருத்து

Next Post
ஊடக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் நாமல் | சமூக ஊடகத்தில் கருத்து

ஊடக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்தார் நாமல் | சமூக ஊடகத்தில் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures