ஆமா டா பீப் பீப் ஆ தான் பேசுவேன் – போராட்ட களத்தில் சிம்பு அதிரடி பேச்சு
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக மாபெரும் இளைஞர் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் பல திரைபிரபலங்கள் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு இன்று மெரினாவிற்கு சென்று இளைஞர்களிடம் பேசினார். அவர் பேசுகையில் ‘இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்ததிலிருந்து எனக்கு அரசியலுக்கு வரியா என கேட்டு மிரட்டுறானுங்க, என்னை நீ மிரட்டலாம் அரசியலுக்கு வரமாட்டேன்.
நாளைக்கு இந்த இளைஞர்கள் வர போறாங்க அப்போ என்ன டா பண்ணுவ, ஒருத்தி தமிழனை பத்தி தெரியாம பேசுறா ஆமா டா பீப் பீப் தான் பேசுவான், தொடுற ரா பாக்கலாம் என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.