Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

June 3, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு வலிமைமிக்க அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஆப்கானிஸ்தானுடனான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை எதிர்கொண்ட இலங்கை, ஆரம்பப் போட்டியில் 6 விக்கெட்களால் தோல்வியுற்று பெரும் ஏமாற்றம் அடைந்தது.

ஹம்பாந்தோட்டை விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியைவிட துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியுடன் தொடரில் 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 269 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 46.5  ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து 2ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 146 ஓட்டங்கள் ஆப்கானிஸ்தானின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

அத்துடன் இலங்கை பந்துவீச்சாளர்கள் 14 வைட்கள் மூலம் 21 ஓட்டங்களை அள்ளிக்கொடுத்திருந்தனர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான மதீஷ பத்திரணவுக்கு இந்தப் போட்டி சிறப்பாக அமையவில்லை. அவர் 8 வைட்களைக் கொடுத்ததுடன் 8.5 ஓவர்களில் 66 ஓட்டங்களை தாரைவார்த்து ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தானின் மொத்த எண்ணிக்கை ஆப்கானிஸ்தான் மொத்த எண்ணிக்கை 25 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மத்துல்லா குர்பாஸ் (14) ஆட்டம் இழந்தார்.

ஆனால், இப்ராஹிம் ஸத்ரானும் ரஹ்மத் ஷாவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து அணியின் மொத்த எண்ணிக்கைய 171 ஓட்டங்களாக உயர்த்தினர்.

இப்ராஹிம் ஸத்ரான் 98 பந்துகளில் 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 98 ஓட்டங்களைப் பெற்றார்.

மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ரஹ்மத் ஷா 3ஆவது விக்கெட்டில் மேலும் 40 ஓட்டங்களை அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிதியுடன் பகிர்ந்தார்.

ரஹ்மத் ஷா 55 ஓட்டங்களையும் ஷஹிதி 38 ஓட்டங்களையும் பெற்று ஆட்டம் இழந்தபின்னர் மொஹமத் நபியும் நஜிபுல்லா ஸத்ரானும் வெற்றி இலக்கைக் கடக்க ஆப்கானிஸ்தானுக்கு உதவினர்.

நபி 27 ஓட்டங்களுடனும் நஜிபுல்லா ஸத்ரான் 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் கசுன் ராஜித்த மாத்திரம் ஓரளவு சிறப்பாக பந்துவீசி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடியபோது 24ஆவது ஓவரை வீசிய லஹிரு குமார 3ஆவது பந்துடன் உபாதைக்குள்ளாகி ஓய்வறை நோக்கிச் சென்றார்.

எஞ்சிய 3 பந்துகளை அணித் தலைவர் தசுன் ஷானக்க வீசி ஓவரைப்பூர்த்தி செய்தார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 268 ஓட்டங்களைப் பெற்றது.

மத்திய வரிசையில் சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்ததாலேயே இலங்கை அணி கௌரவமான நிலையை அடைந்தது.

20ஆவது ஓவரில் 4ஆவது விக்கெட் வீழ்ந்தபோது இலங்கை 84 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இந் நிலையில் சரித் அசலன்கவும் தனஞ்சய டி சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலப்படுத்தினர்.

இலங்கை ஒருநாள் அணிக்கு 2 வருடங்களின் பின்னர் மீளழைக்கப்பட்ட டெஸ்ட் அணித் திமுத் கருணாரட்ன (4), முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் (12) ஆகிய சிரேஷ்ட வீரர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

பெத்தும் நிஸ்ஸன்க 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி ய தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அறிமுக வீரர் துஷான் ஹேமன்த 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இது அணியின் இரண்டாவது அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய அசலன்க 95 பந்துகளில் 12 பவுண்டறிகளுடன் 91 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பரீத் அஹ்மத் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாவது போட்டி இதே அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெறவுள்ளதுடன் அப் போட்டிக்காக இலங்கை அணி நிறையவிடயங்களில் கவனம் செலுத்தி தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாட வேண்டிவரும். அத்துடன் தொடரில் தோல்வியைத் தவிர்ப்பதாக இருந்தால் 2ஆவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

Previous Post

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

Next Post

கைகால்கள் அற்ற உடல்கள் | புகையிர விபத்தில் தப்பியவரின் டுவிட்டர் பதிவு

Next Post
கைகால்கள் அற்ற உடல்கள் | புகையிர விபத்தில் தப்பியவரின் டுவிட்டர் பதிவு

கைகால்கள் அற்ற உடல்கள் | புகையிர விபத்தில் தப்பியவரின் டுவிட்டர் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி

August 20, 2026
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2 ‘ படத்தின் அப்டேட்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2 ‘ படத்தின் அப்டேட்

August 20, 2026
கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

August 19, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழப்பு; சம்பவத்தை கண்ட இரு மாணவிகள் மயங்கி வைத்தியசாலையில் அனுமதி

August 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures