ஆட்சியமைக்க சசிகலாவை அழைக்க முடியாது – தமிழக ஆளுநர்
தமிழக முதலமைச்சராக பதவியேற்க சசிகலாவுக்கு உடனடியாக அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் அரசியல் நிலைவரம் குறித்து மத்திய அரசுக்கு சற்று முன்னர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘தற்போதைய சூழலில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க முடியாது’ என ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு 3 பக்க அறிக்கையை ஆளுநர் அனுப்பியுள்ளார்.
ஆளுநரின் இந்த அறிவிப்பு சசிகலாவுக்கும், அவர் தரப்பினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர் ஆதரவு தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.