Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆடி மாதம் நெருங்குவதால் ஆடுகளுக்கு கிராக்கி

July 16, 2018
in News, Politics, World
0

ஆடி மாதம் நெருங்குவதை முன்னிட்டு, கோயில் விழாக்களில் நேர்த்திக்கடன் செலுத்துவற்காக ஆடுகள் விற்பனை சந்தைகளில் களை கட்டி உள்ளது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிலர், விவசாயத்தோடு ஆடு வளர்ப்பு தொழிலிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் தீபாவளி, ரம்ஜான் மாதங்களிலும், ஆடி மாத திருவிழாக்களிலும் ஆடு விற்பனை களை கட்டும். அதிக வருவாய் தருவதால் ஆடு வளர்ப்பு தொழில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகளவு விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கிராமங்களில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு என தனித்தனி கொட்டகை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. படித்த வேலை இல்லாத இளைஞர்களும் அரசு வங்கிகள் மூலம் கடனுதவி பெற்று ஆடுகளை வளர்த்து வருகின்றனர். பெட்டை ஆடுகள் 10 முதல் 15 மாதத்திலும், கிடாக்கள் 18 மாதத்திலும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. கிடாக்களின் சினைக்காலம் 145 முதல் 150 நாட்கள். ஆடுகள் இறைச்சிக்காகப் பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல் அதன் தோலை கொண்டு விதவிதமான பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கால்நடை சந்தைகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் விற்பனை களை கட்டி வருகிறது. இங்கு 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.4 ஆயிரம் முதல் 4,500 வரை விலை போகிறது.வரும் ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. இதனை முன்னிட்டு தென்மாவட்டங்கள் மற்றும் தமிழகம் எங்கும் கோயில்களில் ஆடித்திருவிழா நடக்கும். விழாக்களில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை பலியிடுவது வழக்கம். பின்னர் கமகம பிரியாணி தயாரித்து, எலும்பு குழம்பு, சுக்கா வறுவல் செய்து மணக்க மணக்க விருந்து படைப்பார்கள். மேலும், புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் கறி சமைத்து விருந்துக்கு அழைப்பார்கள். எனவே, மற்ற தமிழ் மாதங்களை விட, ஆடி மாதத்தில் ஆடு விற்பனை அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு ஆடுகளுக்கு செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் பிறந்ததும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள், வியாபாரிகள் தெரிவித்தனர்.

Previous Post

அஜித் குழு செய்த சாதனை

Next Post

சொந்தமாக உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயம்

Next Post

சொந்தமாக உற்பத்தி செய்யவேண்டிய கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures