ஆச்சரியம்! ஆச்சரியம்!கனடாவின் மோசமான நெருக்கடி நிறைந்த போக்குவரத்து வரிசையில் முதலிடம் எது தெரியுமா?
பாரிய அமெரிக்க நகரங்களுடன் ஒப்பிடுகையில்-நியு யோர்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ்-போன்று நெருக்கடி நிறைந்த மோசமான போக்குவரத்து கொண்ட நகரங்கள் வரிசையில் ரொறொன்ரோ மற்றும் மொன்றியல் முதல் இடம்பெறுகின்றதென புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
நாட்டின் மிக மோசமான நெரிசலான நெடுஞ்சாலையாக ரொறொன்ரோ மத்தியின் ஊடாக செல்லும் நெடுஞ்சாலை 401ன் ஒரு பகுதி விளங்குகின்றது. இச்சாலை கனடா மற்றும் யு.எஸ்.சில் மிகவும் அடைப்பு கொண்ட ஓன்பதாவது அணுகுச்சாலையாக அமைகின்றது.
இந்த வரிசையில் மிக மோசமான நெருக்கடி நிறைந்த பாதை மொன்றியலிலும் காணப்படுகின்றது.நெரிசல் நிலைகளில் மொன்றியல் பொஸ்ரனுடன் ஒப்பிடபடுகின்றதென கனடிய ஆட்டோமொபைல் சங்கத்தின் இப்புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
- ரொறொன்ரோ மொன்றியல் வன்கூவர் முன்னணி வகிக்கின்றது.
- ரொறொன்ரோ- நெடுஞ்சாலை 427ற்கும் யங் வீதிக்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலை 401.
- ரொறொன்ரோ: டொன் மில்ஸ்சிற்கும் விஞ்ச் அவெனியுவிற்கும் இடைப்பட்ட டொன் வலி பார்க்வே.
- மொன்றியல்: புளுவாட் Pie-IX மற்றும் நெடுஞ்சாலை 520ற்கும் இடையில் நெடுஞ்சாலை 20.
- ரொறொன்ரோ: கார்டினர் கடுகதி கிங்ஸ்வே தெற்கு மற்றும் பே வீதிக்கிடையில்.
- மொன்றியல்: நெடுஞ்சாலை 15 நெடுஞ்சாலை 40ற்கும் Chemin de la Côte-Saint-Luc-விற்கும் இடையில்.
- ரொறொன்ரோ: பேவியு அவெனியுவிற்கும் டொன் மில்ஸ் வீதிக்கும் இடையில் நெடுஞ்சாலை 401.
- ரொறொன்ரோ: நெடுஞ்சாலை 401 மற்றும் கிப்லிங் அவெனியுவிற்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலை 409.
- மொன்றியல்: அவெனியு சொலிக்நி மற்றும் று பேபியென் கிழக்கிற்கிடையில் நெடுஞ்சாலை 25.
- வன்கூவர்: கிரான்வில் வீதி தென்மேற்கு மரின் டிரைவ்.
- வன்கூவர்: சிமொர் வீதிக்கும் மேற்கு பென்டர் வீதிக்கும் இடையில் மேற்கு ஜோர்ஜியா வீதி.
.