இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
அந்தவகையில் அவுஸ்ரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் இந்த தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு கொடூர தாக்குதலெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறான வன்முறை சம்பங்களை சந்தித்திருந்தது என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
எனவே இந்த துயரமான சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களுடன் கைகோர்த்து ஒத்துழைப்பு வழங்க தயாரெனவும் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.