Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அவசர சிகிச்சை பிரிவில் நாடு | எதிர்க்கட்சி சபையில் சாடல்

December 10, 2021
in News, Sri Lanka News
0

இந்த நாட்டை ‘வன் மேன் ஷோ’வினால் மீட்டெடுக்க முடியாது. அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது, இதற்கு ராஜபக்ஷவினரின் பொதுஜன முன்னணி அரசாங்கமே காரணம் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதி அமைச்சு ,பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு, சமுர்த்தி உள்ளக பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்தை கையில் எடுத்ததில் இருந்து நாட்டின் சகல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளது, பொருளாதாரம் சரிந்துவிட்டது. மக்களை வரிசையில் நிற்கவைத்து விடீர்கள். நாடே நிதி நெருக்கடிக்குள் வீழ்ச்சிகண்டு விட்டது. வரவு செலவு திட்டத்தை கூட கடன்களில் கையாள வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் நாடு கடன்களில் சிக்க ஆரம்பித்தது. அப்போதைய நிதி அமைச்சர் இன்று பிரதமர், அப்போதைய மத்திய வங்கி ஆளுநரே இன்றும் ஆளுநராக உள்ளார். இவர்களினால் மீண்டும் அதே பயணத்தை மட்டுமே முன்னெடுக்க முடியும்.

உலகில் உள்ள நாடுகளில் தமது வெளிநாட்டு கையிருப்பை ஒரு பில்லியனுக்கும் குறைவாக கொண்டுள்ள நாடொன்று இருக்கும் என்றால் அது இலங்கை என பதிவு செய்துகொள்ள வேண்டும். அந்தளவு மோசமான நிலைக்கு நாடு சென்றுள்ளது. இந்த நிலையில் எந்த நாடும் எமக்கு கடன் கொடுக்காது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் நாட்டின் நிலைமைகளை விமர்சித்துவிட்டு இப்போது வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க முடியுமா. இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரித்தால் நாடு விரைவாக நாசமடையும். அவ்வாறான திட்டங்களே இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளது. குறுகிய கால திட்டங்களை சமர்பித்து நாட்டின் நிதி நெருக்கடியை கையாள முடியாது. நாடு இதனை தாண்டிய பாரிய பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. எமது பிணைகளை கூட பெற்றுக்கொள்ள எவரும் தாயரில்லை. அப்படியே பெற்றுக்கொள்ள வந்தாலும் அவர்கள் கறுப்புப்பண வியாபாரிகளேமட்டுமே வருவார்கள்.

அவ்வாறான கறுப்புப் பணக் கோஷ்டியொன்று 2022 ஆம் ஆண்டில் நாட்டை ஆக்கிரமிக்கப்போகின்றது என்ற தகவலும் எமக்கு கிடைத்துள்ளது. இந்த நாட்டை ‘வன் மேன் ஷோ’ வினால் மீட்டெடுக்க முடியாது. அந்த மனநிலையில் இருந்து விடுபட முடியும். நாடு அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே நாட்டை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தென்னாபிரிக்கா உட்பட ஆறு நாடுகள் மீதான தடை நீக்கம்

Next Post

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Next Post
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures