நபர் ஒருவர் அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுள்ளார். குறித்த நபர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை ஜூன் 8 ஆம் திகதி, Seine-et-Marne இல் உள்ள Esson எனும் கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஒன்றின் முன்னால் நின்றிருந்த குறித்த நபர், திடீரென அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், குறித்த நபரை கைது செய்துள்ளனர். மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் அவர் கோஷமிட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. குறித்த நபர் Melun நகரில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.