அல்பேர்ட்டாவில் சூறாவளி எச்சரிக்கை ஒன்றை கனடா சுற்றுசூழல் வெள்ளிக்கிழமை விடுத்திருந்தது.
இதன் சுழற்சி வெள்ளிக்கிழமை பிற்பகல் 5மணியளவில் விம்போர்ன் பகுதிக்கு அருகாமையில் தொட்டுள்ளதன் பின்னர் இந்த எச்சரிக்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.
அல்பேர்ட்டாவின் திறி ஹில்ஸ் பகுதியை தொட்ட இந்த சூறாவளியை கண்ணுற்ற சாட்சி அறிக்கை ஒன்றை தொடர்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.27அளவில் கடுமையான இடியுடன் கூடிய எச்சரிக்கை மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான இடியுடன் கூடிய எச்சரிக்கை சூறாவளி ஒன்றை உருவாக்கியதாக கூறப்பட்டது. மீண்டும் சூறாவளிக்கான உடனடி வாய்ப்புக்கள் ஏற்படாதென்பதால் எச்சரிக்கை அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரந்து ஆலங்கட்டி மழை, வன்காற்று பொருட்களை தளர்வாக்கியமையால் கட்டிடங்கள் பாதிப்பு, மரங்களிலிருந்து கிளைகள் முறிதல், பாரிய வாகனங்களை திருப்புதல் போன்றன குறித்து எச்சரிக்கபட்டுள்ளது.
அழுக்குகள் நிறைந்த பண்ணை துறைகள் போன்ற பெரிய வடிகுழலி போன்று சூறாவளி காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
எவரும் காயமடைந்ததாக தகவல்கள் ஏதும் இல்லை.
சூறாவளியை நேரில் கண்டு படங்களை எடுத்தவர்கள் பகிர்ந்து கொண்டனர்.