தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 7ஆம் திகதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவர் கடந்த 8ஆம் திகதி மெரினாவிலுள்ள அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
மேலும், கருணாநிதிக்கு இந்திய மத்திய அரசு பாரத ரத்னா விருதும், சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவின் திருச்சி சிவாவும் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

