Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் புகைப்படத்திற்குப் பதிலாக மோடியின் புகைப்படத்தை மாட்டுங்கள்

June 3, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் புகைப்படத்திற்குப் பதிலாக மோடியின் புகைப்படத்தை மாட்டுங்கள்

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அவசியமான உரத்தை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும், அது நாட்டை வந்தடைந்தவுடன் 20 நாட்களுக்குள் அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சுக்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச ஸ்தாபனங்களிலும் மாட்டப்பட்டிருக்கும் ஜனாதிபதியின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்குப்பதிலாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டுமாறு யோசனை முன்வைக்கின்றேன்.

ஏனெனில் இப்போது இந்தியாவிடம் தஞ்சமடைவதைத்தவிர வேறெந்த வழிகளும் இல்லாதுபோயுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (2) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அவசியமான உரத்தை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும், அது நாட்டை வந்தடைந்தவுடன் 20 நாட்களுக்குள் அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவினால் வழங்கப்படும் பொருட்;களைப் பகிர்ந்தளிப்பதற்கான அரசாங்கமா தற்போது இருக்கின்றது என்ற கேள்வி எம்மத்தியில் எழுந்துள்ளது.

அதுமாத்திரமன்றி அடுத்த போகத்திலிருந்து அரிசி இறக்குமதியைப் படிப்படியாகக் குறைக்கப்போவதாகவும், அதன்மூலம் எஞ்சுகின்ற பணத்தை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்கப்போவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். ஆனால் இறக்குமதியியை நிறுத்திய பின்னர் உள்நாட்டு விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு அவசியமான உரத்தை எங்கிருந்து பெறமுடியும்? நாட்டில் டொலருக்கான நெருக்கடி நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கம் உரத்தை இறக்குமதி செய்யுமாறு தனியார் துறையினரிடம் கூறுகின்றது. அவ்வாறெனில் தனியார்துறையினர் அதற்குத் தேவையான டொலரை எவ்வாறு பெற்றுக்கொள்வர்?

எமது நாட்டின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் நிலத்தில் விழும் ஒருதுளி மழைநீரையும் விரயமாக்கக்கூடாது எனக்கருதி அதனைச் சேமிக்கக்கூடியவாறு வாவி, குளங்கள் போன்றவற்றை நிர்மாணித்திருக்கின்றார்கள். ஆனால் நாட்டின் நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதாகக்கூறி ஆட்சிபீடமேறியவர்கள் நவீனமுறைகளை மாத்திரமன்றி பழமையான முறைகளையும் இல்லாமல் செய்திருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சுக்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச ஸ்தாபனங்களிலும் மாட்டப்பட்டிருக்கும் ஜனாதிபதியின் புகைப்படத்தை அகற்றிவிட்டு, அதற்குப்பதிலாக இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை மாட்டுமாறு யோசனை முன்வைக்கின்றேன். ஏனெனில் இப்போது இந்தியாவிடம் தஞ்சமடைவதைத்தவிர வேறெந்த வழிகளும் இல்லாதுபோயுள்ளன. உலகநாடுகளின் சிறந்த அபிப்பிராயத்தை வென்றவர் என்று கருதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக்குவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானமும் இப்போது தோல்வியடைந்திருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க ‘டீல்’ மூலம் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டபோதிலும், அந்த அரசாங்கத்தை செயற்திறனான முறையில் நிர்வகித்து முன்னோக்கிச்செல்லமுடியாத நிலையேற்பட்டிருக்கின்றது என்றார்.

Previous Post

வாக்கெடுப்பின் போது மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளுக்கு முன் மக்கள் ஒன்று கூட வேண்டும்

Next Post

நீதியமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் சந்திப்பு

Next Post
நீதியமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் சந்திப்பு

நீதியமைச்சருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures