இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளன, சிறுபான்மை மக்கள் சட்டதிட்டங்களால் ஒடுக்கப்படுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், அந்தப் பதவியிலிருந்து நேற்று விலகிக்கொண்டார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண் வேட்பாளராகக் களமிறங்குவதற்காக அவர் பதவி விலகிக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆணையாளர் பதவியிலிருந்து விலகிய மனித உரிமைகள் சட்டத்தரணியும் பெண்ணியல்வாதியுமான அம்பிகா சற்குணநாதனுக்கு நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் பிரிவுபசார வைபவம் இடம்பெற்றது.
“இன்றிலிருந்து கொழும்புக்கு வெளியில் சென்று மக்களுக்கு சேவையாற்றப் போகின்றேன்” என்று அவர் சக பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

