அமெரிக்க விமான நிலையத்தில் கைதான இந்தியர் மரணம்

அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 58 வயது இந்திய முதியவர் உயிரிழந்தார்.

அமெரிக்க விமான நிலையத்தில் கைதான இந்தியர் மரணம்
நியூயார்க்:

இந்தியாவை சேர்ந்தவர் அதுல்குமார் பாபுபாய் படேல் (58). கடந்த 10-ந்தேதி இவர் ஈகுவேடார் நாட்டில் இருந்து அமெரிக்காவின் அட்லாண்டாவுக்கு விமானம் மூலம் வந்தார்.

அவரை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் அமெரிக்காவில் நுழைவதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை 2 நாட்கள் விசாரணை மையத்தில் அடைத்து வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையின் போது உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனே அவரை அட்லாண்டாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றிய தகவல் இந்திய தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *