Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம் | சொந்த வேட்பாளருக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பு

January 5, 2023
in News, World, முக்கிய செய்திகள்
0
அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் தேர்தலில் குழப்பம் | சொந்த வேட்பாளருக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் வாக்களிப்பு

அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்ட குடியரசுக் கட்சியின் தலைவர் கெவின் மெக்கார்த்தி, சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் 3 சுற்று வாக்கெடுப்புகளின் பின்னரும் வெற்றியீட்டுவதற்குத் தவறினார்.

மெக்கார்த்தியன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பிகள் அவருக்கு எதிராக வாக்களித்தமை இதற்குக் காரணம்.

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க இடைக்கால தேர்தல்களையடுத்து, கீழ்சபையான பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மைப் பலத்தை குடியரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. குடியரசுக் கட்சிக்கு 222 ஆசனங்களும் ஜனநாயகக் கட்சிக்கு 212 ஆசனங்களும் உள்ளன.

434 ஆசனங்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில், சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதற்கு 218 வாக்குகள் தேவை. 222 ஆசனங்களைக் கொண்டுள்ள குடியரசுக் கட்சியினால் இப்பதவிக்கு பிரேரிக்கப்படுபவர் இலகுவாக வெற்றி பெறுவது சாத்தியம்.

இந்நிலையில், புதிய சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் கெவின் மெக்கார்தி (Photo: AFP)

இதன்போது குடியரசுக் கட்சியினால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளரான கெவின் மெக்கார்திக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால் அவருக்கு 203 வாக்குகளே கிடைத்தன.

அதன்பின் இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடைபெற்றது. இரண்டாவது சுற்றிலும் 19 குடியரசுக் கட்சி எம்பிகள் மெக்கர்த்திக்கு வாக்களிக்கவில்லை.

அதையடுத்து 3 ஆவது சுற்று வாக்களிப்பு நடைபெற்றது. இம்முறை குடியரசுக் கட்சியின் 20 எம்.பிகள், மெக்கார்த்திக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவருக்கு 202 வாக்குகளே கிடைத்தன.

இவ்வாக்களிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி தலைவர் ஹக்கீம் ஜெப்ரிக்கு 212 வாக்குகள் கிடைத்திருந்தன.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹக்கீம் ஜெப்ரி – மத்தியில்) (AFP Photo)

எந்தவொரு வேட்பாளரும் போதிய வாக்குகளைப் பெறாத நிலையில், இத்தேர்தல் இன்று புதன்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 100 வருடங்களில் அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் சபாநாயகர் முதல் சுற்று வாக்களிப்பில் தெரிவு செய்யப்படாதமை இதுவே முதல் தடவையாகும்.

இறுதியாக 1923 ஆம் ஆண்டு சபாநாயகர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்புகள் நடைபெற்றன.

கெவின் மெக்கார்த்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்பிகள் குடியரசுக் கட்சி எம்பிகளில் தீவிர வலதுசாரி குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாராளுமன்ற அவை விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

Previous Post

நலம் விசாரிக்க சம்பந்தனின் வீடுதேடிச்சென்ற மஹிந்த வழங்கிய உறுதிமொழி

Next Post

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் அறிவியலுக்கான பார்வை | பிரதமர் மோடி

Next Post
பிரதமர் மோடியை ராவணன் உடன் ஒப்பிட்ட கார்கேவுக்கு பாஜக கண்டனம்

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் அறிவியலுக்கான பார்வை | பிரதமர் மோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026

Recent News

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026
பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

பிரதமரை சந்தித்தனர் IMF பிரதிநிதிகள் 

June 30, 2026
ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

ஷியாமலா பெரேராவுக்கு பிணை 

June 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கொத்துரொட்டி உணவக உரிமையாளர் பிணையில் விடுதலை

June 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures