அமெரிக்காவில் இளம்பெண்ணை கற்பழித்த பொலிஸ்
அமெரிக்க நாட்டில் உதவிக்கு அழைத்த இளம்பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் கொடூரமாக கற்பழித்ததை தொடர்ந்து அவருக்கு ரூ.37 கோடி இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள Milwaukee என்ற நகரில் பெயர் வெளியிடப்படாத இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு யூலை மாதம் இளம்பெண் குடியிருந்த வீட்டில் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.
அதாவது, அருகில் குடியிருந்த சில நபர்கள் பெண்ணின் வீடு மீது கற்களை வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்(அப்போதைய வயது 19) பொலிசாரை 911 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு உதவிக்கு அழைத்துள்ளார்.
இளம்பெண்ணின் புகாரை பெற்ற Ladmarald Cates என்ற பொலிஸ் அதிகாரி உடனடியாக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது இளம்பெண்ணின் அழகில் மயங்கிய பொலிஸ் அதிகாரி அவரை கற்பழிக்க முயன்றுள்ளார். பொலிஸ் அதிகாரியின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கடுமையாக போராடியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொலிஸ் அதிகாரி இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி, அவரது கைகளில் விலங்கு பூட்டி கொடூரமாக கற்பழித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு பிறகு தான் பொலிஸ் அதிகாரியால் கற்பழிக்கப்பட்டேன் என இளம்பெண் கூறியதை மற்ற பொலிஸ் அதிகாரிகள் ஏற்கவில்லை.
இருப்பினும், தனது முயற்சியை கைவிடாது போராடிய அவர் மருத்துவமனை பரிசோதனை மூலம் பொலிஸ் அதிகாரி தன்னை கற்பழித்தது உண்மை என ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பணியில் இருந்தபோது உதவிக்கு அழைத்த பெண்ணை கொடூரமாக கற்பழித்த பொலிஸ் அதிகாரி உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு அவருக்கு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரியால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு உதவ நகராட்சி அதிகாரிகள் முன் வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2.5 மில்லியன் டொலர்(37,56,25,000 இலங்கை ரூபாய்) வழங்க உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.