அப்பல்லோ ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் நிலவிவரும் நிலையில் தினந்தோறும் புது தகவல்கள் வெளியாகி அதிர வைக்கின்றன.
அந்த வகையில் நேற்று ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா இறந்துவிட்டதாக 2 மணிநேரம் கழித்து தாமதமாகவே தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.
கடந்தாண்டு டிசம்பர் 5ம் திகதி மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதா அவர்கள் இறந்துவிட்டதாகவும், இரண்டு மணிநேரம் தாமதமாகவே 6.30 மணியளவில் தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டது குறித்து தன்னிடம் அனுமதி பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வத்திடம் இதுகுறித்து அனுமதி பெறப்பட்டதாக கூறியிருந்தார்.
இதை மறுத்துள்ள பன்னீர்செல்வம், அந்த அறிக்கையை வாபஸ் பெறாவிட்டால் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.