அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு, 26,000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தவிர கல்வி பீடங்களுக்கு மேலும் 6,000 பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.













