அபார ஆட்டத்தின் மூலம் அணியை மீட்டெடுத்தார் Leus du Plooy
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் பயிற்சி போட்டியில் முதல் இன்னிக்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கட் இழப்பிற்கு 285 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுத்தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணிக்கும், தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் பயிற்சி போட்டி நேற்று இடம்பெற்றது.
பொட்சேபிஸ்ட்ரூம் சென்வெஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் கவுஷல் சில்வா 80 ஓட்டங்களையும், கருணரத்ன 71 ஓட்டங்களையும், தனஞ்சயன் டி சில்வா 62 ஓட்டங்களையும், மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பாக ஒளிவீர் 4 விக்கட்டுகளையும், லிண்டே 3 விக்கட்டுகளையும், ஸ்மித் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி Leus du Plooy-யின் (142 ஓட்டங்கள்) அபார ஆட்டத்தினால் 285 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த அணியில் வேறு எவரும் நேற்றைய ஆட்டத்தில் பிரகாசிக்கவில்லை.
இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 3 விக்கட்டுகளையும், ஏஞ்சலோ மத்தியூஸ் மற்றும் டில்ருவான் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுக்களையும், நுவான் பிரதீப் 1 விக்கட்டையும் வீழ்த்தினர்.