Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

‘அநியாயத்துக்கு அன்பான மருமகளா நடிக்கிறீயேமா’னு கலாய்ப்பாங்க!” ‘நீலி’ நிரஞ்சனி

August 26, 2017
in Cinema
0
‘அநியாயத்துக்கு அன்பான மருமகளா நடிக்கிறீயேமா’னு கலாய்ப்பாங்க!” ‘நீலி’ நிரஞ்சனி

“ஏர்ஹோஸ்டஸ், பியூட்டீஷியன், காஸ்டியூம் டிசைனர்னு பல துறைகளில் கவனம் செலுத்தியிருந்தாலும், எனக்கு ரொம்பப் பிடிச்சது ஆக்டிங். அதில், இப்போது முழு கவனம் செலுத்திட்டிருக்கேன். அடுத்து, டைரக்‌ஷனையும் ஒரு கை பார்த்துடணும்” என உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை நிரஞ்சனி. சன் டிவி ‘வாணி ராணி’ மற்றும் விஜய் டிவி ‘நீலி’ சீரியல்களில் நடித்துவருபவர்.

“மீடியா பயணம் தொடங்கியது எப்படி?”

“சின்ன வயசிலிருந்தே டான்ஸ், ஆக்டிங்ல ரொம்ப ஆர்வம். பிளஸ் டூ படிச்சுட்டிருந்தப்போ ஸ்கூல் கல்ச்சுரல் புரோகிராமில் டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் பண்ணினேன். அந்த நிகழ்ச்சிக்கு சீஃப் கெஸ்ட்டா வந்தது, நாசர் சார். என்னைப் பாராட்டியவர், அப்பாகிட்ட ‘உங்க பொண்ணுக்கு சினிமாவில் நடிக்க எல்லாத் திறமைகளும் இருக்கு. இப்பவே கவனம் செலுத்தி ஊக்கப்படுத்துங்க’னு சொன்னார். பிறகு, சன் டிவியின் ‘அழகி’ சீரியலுக்கு நடந்த ஆடிஷனில் கலந்துகிட்டேன். ஐந்தாயிரம் பேர் கலந்துகிட்ட அதில், செலக்டான ஆறு பேரில் நானும் ஒருத்தி. தொடர்ந்து, அந்த சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சேன்.”

“நடிப்புக்காக காலேஜ் கோர்ஸையே மாத்திக்கிட்டீங்களாமே?”

“ஆமாம். ‘அழகி’ சீரியல் சமயத்தில், கல்லூரியில் டிசைனிங் கோர்ஸில் சேர்ந்தேன். மாடலிங், ஆக்டிங்னு நிறைய வாய்ப்புகள் வரவே, ஆக்டிங்தான் என் எதிர்காலம்னு முடிவெடுத்தேன். அதனால், ஒரு செமஸ்டர்கூட வீணாக வேணாம்னு, அதே காலேஜில் பி.எஸ்ஸி., விஸ்காம் கோர்ஸில் சேர்ந்துட்டேன்.”

“அசிஸ்டென்ட் டைரக்டராக வொர்க் பண்ணின அனுபவம்…”

“காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறப்போ, தென்னிந்திய அழகிப் போட்டியில், செமி ஃபைனலில் தமிழ்நாடு ஸ்டேட் வின்னரா வந்தேன். எக்ஸாம் இருந்ததால், ஃபைனல் போட்டியில் கலந்துக்க முடியலை. அப்போ, பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவின் ஒரு தெலுங்குப் படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டரா இன்டர்ன்ஷிஃப்பில் வொர்க் பண்ணினேன். எனக்கு டைரக்டராகணும்னு ரொம்பவே ஆசை. அந்தப் படம், அதுக்கு நல்ல அனுபவம் கொடுத்துச்சு. அப்புறம், சந்தானம் சாரின் ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சுது. தொடர்ந்து, ஜெயா டி.வி ‘அக்கா’ சீரியலில் நடிச்சேன்.”

“ஏர்ஹோஸ்டஸ், பியூட்டீஷியன்னு பல துறைகள்ளில் கவனம் செலுத்தறீங்களே எப்படி?”

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு துறைமீது ஆர்வம் வரும். இறங்கி வொர்க் பண்ண ஆரம்பிச்சிருவேன். யாரையும் நம்பி இருக்காமல், சுயமாக இருக்கணும் என்பது என் எண்ணம். காலேஜ் முடிச்சதும் ஏர்ஹோஸ்டஸ் கோர்ஸ் முடிச்சுட்டு, பெங்களூரில் சில மாசம் இருந்தேன். அப்போ, அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு. அவங்க பக்கத்திலிருந்து கவனிச்சுக்கிறதுக்காக வேலையை விட்டுட்டு சென்னைக்கு வந்துட்டேன். அதேமாதிரி பியூட்டீஷியன், காஸ்டியூம் டிசைனிங்னு பலவற்றை கத்துக்கிட்டேன்.”

“ ‘பிரியமானவள்’ கவிதா ரோல் அனுபவம் எப்படி இருக்கு?”

“அம்மாவை கவனிச்சுக்க சென்னைக்கு வந்த சமயத்தில்தான், சன் டிவி ‘பிரியமானவள்’ சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அம்மாவுக்கும் உடம்பு சரியாகிடுச்சு. அந்த சீரியல்ல ஆர்வமா நடிக்க ஆரம்பிச்சேன். ‘அநியாயத்துக்கு அன்பான மருமகளா இருக்கியேமா’ன்னு பலரும் பாராட்டுற அளவுக்கு அந்த கேரக்டருக்கு எக்கச்சக்க லைக்ஸ். ‘உன்னை மாதிரி ஒரு மருமகள் எங்களுக்குக் கிடைக்கணும்’னு பாசத்தைக் கொட்டுற அளவுக்கு ரீச் கிடைச்சுது. தொடர்ந்து, கலைஞர் டி.வி ‘கண்ணம்மா’ சீரியலிலும் நடிச்சேன்.”

“டைரக்டர் கனவு எந்த அளவில் இருக்குது?”

“நிறைய மூவி ரோல்ஸ் வந்தாலும், நல்ல பெயர் கிடைக்கிற மாதிரியான ரோலில் நடிக்கணும்னு உறுதியா இருக்கேன். டைரக்டர் கனவை நோக்கியும் பயணிச்சுட்டிருக்கேன். இப்போதைக்கு, சன் டிவி ‘வாணி ராணி’ சீரியலில் செல்வி மற்றும் விஜய் டிவி ‘நீலி’ சீரியலில் திவ்யா ரோல்கள் சிறப்பாக போயிட்டிருக்கு. ‘ரெடி… ஆக்‌ஷன்!’ சொல்லும் நாள் சீக்கிரம் வரும்னு நம்பறேன்” எனப் புன்னகைக்கிறார் நிரஞ்சனி

Previous Post

‘குயின்’ ரீமேக்கில் காஜல் அகர்வால்

Next Post

காவலர் பணியில் இரண்டாவது திருநங்கை

Next Post
காவலர் பணியில் இரண்டாவது திருநங்கை

காவலர் பணியில் இரண்டாவது திருநங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures