வடமராட்சியின் துன்னாலை, கரவெட்டிப் பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது அடையாள அட்டை இன்றி பயணித்தனர் எனக்கூறி சுமார் 18 பேர்வரை கைது செய்யப்பட்டனர். அவர்கள் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டுள்ளன.
அதன்பின்னர் அவர்கள் அனைவரும் நெல்லியடிப் பொலிசாரினால் தலா ஒரு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இத் தொடர் கைது நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதட்டநிலை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.