அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..: சசிகலா அதிரடி நடவடிக்கை
தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் பன்னீர் செல்வம் இன்று இரவு ஜெயலலிதா சமாதி முன்பு சுமார் 40 நிமிடங்களுக்கு முன்னர் மெளன அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுக-வின் பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
இதை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் ஆலோசனை நடத்திய பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.