Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்கவைத்துக்கொள்ள முடியாது – முன்னாள் சபாநாயகர்

March 2, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சபையில் ஆளுந்தரப்பை கண்டித்தார் சபாநாயகர்

அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பது எனது நம்பிக்கையாகும். பல கோடி பெறுமதியான அரச சொத்துக்களை அழித்து, அரச சேவையை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டவர்கள் அரச சொத்து முறைக்கேடு மற்றும் அரசசேவை வினைத்திறனாக்கம் பற்றி பேசுவது கர்மவினை என்றே குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பதவி காலத்தின் இறுதி பகுதியில் ஒன்பது மாதங்களுக்கு 334 இலட்சம் ரூபாய்க்கு எரிபொருள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. இந்த வாகனம் தொடர்பான பதிவுகள் பாராளுமன்றத்தில் உள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து கணக்காய்வு செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2025.02.27 ஆம் திகதியன்று சபைமுதல்வர் பிமல் ரத்நாயக்க முன்னாள் சபாநாயகர் பயன்படுத்திய வாகனங்கள் குறித்து வெளியிட்ட விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உண்மையை  குறிப்பிட விரும்புகிறேன்.

1983 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு முதன்முறையாக தெரிவு செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டேன்.இக்காலப்பகுதியில் எவ்விதமான அரச உத்தியோகபூர்வ இல்லங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன்.சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு மற்றும் பதவிக்கான பணிகளின் நிமித்தம் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக்கொண்டேன். 

 சபாநாயகருக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் வசித்த காலத்தில்  உணவுக்கான கட்டணத்தை எனது தனிப்பட்ட கணக்கில் இருந்து செலுத்தினேன் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்கிறேன்.

சபாநாயகர் பதவி வகிப்பவருக்கு மூன்று அரச வாகனங்கள் ஒதுக்கப்படும்.இதற்கு மேலதிகமாக  பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வாகனம் ஒன்றும் பாதுகாப்பு நிமித்தம் வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக எனது பிரதான ஐந்து பணியாட்களுக்காக ஐந்து வாகனங்களும் அதற்காக எரிபொருளும் வழங்கப்பட்டன.

எனக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு 334 இலட்சம் ரூபாய்க்கு எரிபொருள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.இந்த வாகனம் தொடர்பான பதிவுகள் பாராளுமன்றத்தில் உள்ளது. ஆகவே இவ்விடயம் குறித்து கணக்காய்வு செய்யுமாறு  வலியுறுத்துகிறேன்.

பதவி காலத்தில் நான் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஊடகங்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக தகவல்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட பொய்யை என்றும் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பது எனது நம்பிக்கையாகும். பல கோடி பெறுமதியான அரச சொத்துக்களை அழித்து, அரச சேவையை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டவர்கள் அரச சொத்து முறைக்கேடு மற்றும் அரச சேவை வினைத்திறனாக்கம் பற்றி பேசுவது கர்மவினை என்றே குறிப்பிட வேண்டும்.

நவநாகரீகமான முறையில் ஆடையணிந்தால் மாத்திரம் ஒருவர் முழுமையடைய முடியாது. நடத்தை மற்றும் செயற்பாடுகள் ஊடாகவே மனிதம் முழுமையடைவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். வழங்கும் போதனைகள் அனைவருக்கும் பொதுவானதாகவும், ஏற்புடையதாக அமைய வேண்டும்.

பொய்யுரைத்தல் மற்றும் பிறர்மீது வெறுப்பினை தூண்டிவிடுதல் பௌத்தமத அறகோட்பாடுகளுக்கு எதிரானது. நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக்கொள்வார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் வெகுவிரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

Previous Post

சிக்குவாரா கோட்டாபய! அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

Next Post

பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஸாஹிராவை எதிர்த்தாடுகிறது ஏறாவூர் அலிகார் ம.க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியுடன் டியூனிசியா வெளியேறியது

June 21, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி விடயத்தில் அரசின் அணுகுமுறைய வரவேற்கின்றோம் – சிறிநேசன்

June 21, 2026
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் | பொலிஸார் எச்சரிக்கை

சமூக ஊடகங்கள் ஊடாக பெண்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் எச்சரிக்கை!

June 21, 2026
செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

June 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures