Easy 24 News

அடுக்கு மாடி அலகொன்றிற்குள் பிணத்துடன் சிறு குழந்தை!

அடுக்கு மாடி அலகொன்றிற்குள் பிணத்துடன் சிறு குழந்தை!

ஒட்டாவா-இரண்டு வயது சிறு குழந்தை ஒன்று தொடர்மாடி கட்டிட அலகு ஒன்றிற்குள் பிணமொன்றுடன் தனியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொலிசார் புலன்விசாரனை செய்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை காலை 11மணியளவில பொலிசார் சென்று பார்த்த போது இறந்த பெண் ஒருவரை கண்டுள்ளனர்.
இரண்டு வயது சிறுவன் ஒருவனையும் அருகில் கண்டுள்ளனர். அயலவர்கள் சிறுவன் பெண்ணின் மகன் என தெரிவித்தனர்.
குழந்தை பெண்ணின் இறந்த உடலுடன் எவ்வளவு நேரம் இருந்தான் என்பது தெரியவரவில்லை.
கட்டிடத்தை இயக்கும் ஒட்டாவா சமூக வீட்டு வசதி வாரியம் மூலம் தகவல் தெரிந்து கொள்ள முடியவில்லை என அறியப்படுகின்றது.
விசாரனை முடியும் வரை மேலதிக தகவல்களை பொலிசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
பெண் சிறு குழந்தையுடன் வசித்து வந்ததாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்திருக்கும் என்பது மர்மமாக உள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *