Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடிக்கடி மாற்றப்படும் கல்விக் கொள்கைகளால் எந்தப் பயனும் இல்லை- ஸ்ரீதரன்

February 14, 2020
in News, Politics, World
0

இலங்கையின் கல்விக் கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக மாற்றப்படும் நிலையில் அவற்றினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தரமான கல்விக் கொள்கையை உருவாக்காமல் முன்னேற்றத்தைக் காணமுடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள சக்திபுரம் பகுதியில் கிராமிய அபிவிருத்திம் திட்டத்தின்கீழ் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட ஜமுனன் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

குறிதத் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சிறிதேவன் தலைமையில் இடம்பெற்றதுடன் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் கலந்துகொண்டு முன்பள்ளி கட்டடத்தினைத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் உரையற்றிய ஸ்ரீதரன், “இலங்கையின் கல்விக் கொள்கைகள் அரசியல் இருப்புக்காகவே மாறிமாறி வருகின்ற அரசாங்கங்களினால் அமைக்கப்படுகின்றன.

முன்பள்ளிகள், பாடசாலைகள் கல்வி திணைக்களத்தின் கீழ் கல்வி கொள்கைகளுக்காக இயங்க வேண்டும். விடுதலைப் புலிகள் அமைப்பு அக்காலப்பகுதியில் தனியான கட்டமைப்புக்களை உருவாக்கி முன்பள்ளிகளைத் தரமாக வழிநடத்தினார்கள். ஒரு விடுதலை அமைப்பினால் இதனைக் கொண்டுசெல்ல முடியும் எனில் ஏன் ஓர் அரசாங்கத்தினால் கொண்டுசெல்ல முடியாதுள்ளது?

ஒவ்வொரு அரசாங்கங்களும் ஆட்சிக்கு வரும்போதும் புதிய கல்விக்கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் கல்வியில் முன்னேற்றம் எட்டப்படுவதில்லை. இலங்கையின் கல்விக்கொள்கைகள் அவ்வப்போது அரசியல் இருப்புக்காக உருவாக்கப்படுகின்றன. அத்துடன் கல்விக்கொள்கை மாறாத வரையும் கல்வியில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியாது.

நாட்டின் வழிகாட்டிகளாக பல்கலைக்கழகங்கள் இருக்கும் அதேவேளை, அவை உயர்ந்த பார்வையில் பார்க்கப்படுகின்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கிளிநொச்சி வளாக மாணவர்கள் கூட தமது பல்கலைக்கழகத்தின் பெயரைக்கூற வெட்கப்படுகின்றார்கள். அரசியல் என்பதற்கு அப்பால் எமது சமூகம் தவறான பாதையில் செல்கின்றது.

தற்போது எமது சமூகம் சீரழிக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் ஒரு தனியார் கல்வி நிலையத்தை நடத்தி வரும் ஆசிரியர் தனது கல்வி நிலையத்தை மூடப்போவதாக அண்மையல் குறிப்பிட்டார்.

அதாவது, போதைப்பொருள் பாவனையால் சின்னாபின்னமாகிப்போயுள்ள இளைஞர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் கல்விக்காக செல்கின்ற மாணவிகள் மீது துன்புறுத்தல்கள், பாலியல் சேட்டைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் பெற்றோர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமது பிள்ளைகளின் வளர்ப்பு முறைகள் தொடர்பாக திரும்பிப்பார்க்க வேண்டும். இந்த சமுதாயம் ஏன் இவ்வாறானதொரு நிலைக்குச் சென்றுள்ளது என்பது குறித்து நாம் ஆராய வேண்டும்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உயர்ந்த பார்வையில் பார்த்த நிலையில் இன்று இவ்வாறு பின்னுாக்கி சென்றமைக்கான காரணம் என்ன?

எமது வளர்ப்பு முறையில் குறைபாடுகள் உள்ளதா என்பதை பெற்றோர்களாகிய நாங்கள் நிச்சயமாக திரும்பிப் பார்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் பெற்றோர்களாகிய நாங்கள் எமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்க்காது போனால் மிக மோசமான சமூகமாக எமது இனம் மாறும் நிலையே ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

Previous Post

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை

Next Post

விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக பரிசீலனை

Next Post

விமானப் போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பாக பரிசீலனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures