அசாதாரண மழையினால் வெள்ள அலை!

பலத்த மழை காரணமாக ஏற்பட்ட விரைவான வெள்ளப்பெருக்கினால் ஹமில்ரன் பகுதி பூராகவும் வீதிகள் மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஹமில்ரன் பாதுகாப்பு அதிகார சபை வெள்ள கண்காணிப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. குடியிருப்பாளர்கள் மதகுகள், அணைகள் மற்றும் பாலங்களிற்கு அண்மையில் அவதாமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

டன்டாஸ், ஒன்ராறியோவும் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இரவு பூராகவும் 40 முதல் 70மில்லி மீற்றர்கள் வரையிலான மழை பெய்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

பலத்த மழைகாரணமாக வெள்ளம் அலை அலையாக புரண்டோடியுள்ளது.

இரவு 8மணியளவில் வெள்ளப்பெருக்கு குறித்து ஹமில்ரன் பொலிசார் அழைப்புக்களை பெற ஆரம்பித்தனர்.

டன்டாஸ் பகுதியில் மழை ஆரம்பித்து  15 நிமிடங்களிற்குள் வீதிகள் மூழ்கடிக்கப்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டன்டாஸ், ஒன்ராறியோவிற்கும் நெடுஞ்சாலை 6ற்கும் இடைப்பட்ட பொது பாதை வீதியில் வழிந்தோடிய நீர் காரணமாக மூடிவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டதாக பொலிசார் கூறியுள்ளனர்.

சில பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

வாகனத்திற்குள் இருந்து மனிதரொருவரை ஹமில்ரன் தீயணைப்பு பிரிவினர் காப்பாற்றினர்.

வருடத்தின் இக்காலப்பகுதியில் டன்டாஸ், ஒன்ரறியோ பகுதியில் வெள்ளம் அசாதாரணமான தென பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.

வீடுகள் வர்த்தக நிலையங்கள் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளன.

floodflood1flood2flood3flood4flood5flood6flood7flood8

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *