Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி தீவிர கவனம் !!

July 18, 2017
in News
0
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி தீவிர கவனம் !!

தேசிய அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் விதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மத்தியில் உருவாகியுள்ள புதிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து பேசிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சின் சிரேஷ்ட அமைச்சர்கள், தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சின் அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த சந்திப்பில் கடுமையான கருத்துகள் பரிமாறப்பட்ட சந்திப்பாக இருந்ததாக ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 94 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. எனினும், சுதந்திர கட்சியில் மஹிந்த அணி, மைத்திரி அணி என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டிருந்தது.

மஹிந்தவும், மைத்திரியும் முழுமையான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டிருந்தாலும் கூட, 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு மேலும் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவித்தன.

தமது செயற்பாடுகளை மூன்று மாதங்களுக்குள் ஒழுங்கு படுத்தாவிடின், முழு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தையும் பதவிநீக்கம் செய்யக் கோரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கையை கருத்தில் எடுக்க நேரிடும் என்றும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது

2004ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலைத்தது போன்ற முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர்.

அப்போது இரண்டரை ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் கலைத்து, புதிய தேர்தலுக்கு உத்தரவிட்ட சந்திரிகா குமாரதுங்க, அதன் பின்னர் மக்கள விடுதலை முன்னணியுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார்.

எனினும், 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், தற்போதைய பாராளுமன்றத்தை 2020ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்க முடியாது.

சந்திரிகா குமாதுங்க தனது சொந்த செல்வாக்கில் பதவிக்கு வந்தவர். எனினும், சிறிசேன அவ்வாறில்லை அவர் பெருமளவில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளினால் தான் பதவிக்குவந்தார்.

எதிர்வரும் வரும் செப்டம்பர் மாதத்துடன், முடிவடையும் இரண்டு ஆண்டுகால புரிந்துணர்வு உடன்பாடு முடிவுக்கு வந்ததும், தாம் கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

எனினும் இவர்களின் அச்சுறுத்தலினால் அரசாங்கத்துக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்படாது. கூட்டு அரசாங்கம் பிளவுபடக் கூடும். ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான அரசாங்கம் பலமான நிலையில் தான் இருக்கும். எவ்வாறாயினும். இது அரசியலமைப்பு திருத்தத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு விலக்கப்பட்டால் கூட, பாராளுமன்றத்தில் 107 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 6 ஆசனங்கள் மாத்திரமே தேவைப்படும்.

அதற்காக அவர்கள் 6 ஆசனங்களைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியையோ, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ நாடக் கூடும் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Previous Post

தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே அலரி மாளிகை கலந்துரையாடல் – வாசுதேவ நாணயக்கார

Next Post

இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி!!

Next Post
இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி!!

இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

May 28, 2026
கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

கல்முனை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன

May 28, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோகம் | நாடளாவிய ரீதியில் போராட்டங்களுக்கு அழைப்பு

May 28, 2026
வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

வெசாக் பண்டிகைக்கு தயாராகும் இலங்கை – பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள அறிவிப்பு

May 28, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures