விண்வெளியில் இருந்து அணு ஆயுதம் வீசுவோம்: ரஷ்யா தடாலடி…!!

விண்வெளியில் இருந்து அணு ஆயுதம் வீசுவோம்: ரஷ்யா தடாலடி…!!

மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் செய்தி ஒன்றை ரஷ்யா ராணுவம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி ரஷ்யா விண்வெளியில் இருந்து வெடிகுண்டு வீசும் விமானம் ஒன்றைத் தயாரித்து வருவதாகவும், இந்த விமானம் முழுக்க அணு ஆயுதங்களால் நிரப்பப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதன் படி விண்வெளியில் இருந்து இரண்டே மணி நேரத்தில் பூமியை தாக்கும் திறன் கொண்ட விமானங்களைத் தயாரித்து வருவதாக ரஷ்யா நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்துத் தி டெய்லி பீஸ்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதபோட்டி நடைபெறும், ஆனால் இம்முறை இந்தப் போட்டி விண்வெளியில் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த விமானமானது
அமெரிக்க வான் படையின் மறுபயன்பாட்டு விமானமான போயிங் எக்ஸ்-37 (Boeing X-37) போன்றதாகும். இது சர்வதேச விண்வெளி மையத்தின் சிறிய ரக விமானம் என்பதோடு இதனை ரிமோட் மூலம் இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை தவிரப் பல்வேறு
நாடுகளும் இது போன்ற விமானம் ஒன்றைத் தயாரித்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யா தனது விமானத்தில் அணு ஆயுதங்களை நிரப்பி வைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விமானமானது ரஷ்யா
வான்வெளியில் ரோந்து சென்று கொண்டே இருக்கும், தகவல் கிடைத்ததும் இலக்கைத் தாக்கி அதன் பின் தனது ராணுவ தளத்திற்குத் திரும்பி விடும் என லெப்டினன்ட் அலெக்செய் ஸ்லோடோவின்கோவ் ரஷ்யாவின் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ரஷ்யாவின் இந்த
நடவடிக்கையானது சர்வதேச விதிகளை மீறுவதோடு, ரஷ்யாவின் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துகின்றது’ என டெய்லி பீஸ்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நிம்பிள், வெர்சட்டைல் எக்ஸ்-37பி
போன்ற விமானங்களைக் கொண்டு விண்வெளியில் ஆயுதங்களை நிரப்புகின்றது’ என ரஷ்யா அமெரிக்கா மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

2010 ஏப்ரல் மாதம்
அமெரிக்க வான் படை எக்ஸ்-37பி முதல் முறையாக ஏவியதற்கு, அமெரிக்கா விண்வெளி அமைதி ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ரஷ்யா குற்றம்சாட்டியது.

விண்வெளி அமைதி ஒப்பந்தமானது
1967 ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சுமார் 104 நாடுகளால் இணைந்து இயற்றப்பட்டதாகும். இந்த ஒப்பந்தம், விண்வெளி இராணுவமயமாக்கலுக்குத் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News