Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாட்சன் அதிரடி: கெய்ல் அணியை பந்தாடியது சமியின் செயின்ட் லூசியா

August 2, 2016
in News, Sports
0
வாட்சன் அதிரடி: கெய்ல் அணியை பந்தாடியது சமியின் செயின்ட் லூசியா

வாட்சன் அதிரடி: கெய்ல் அணியை பந்தாடியது சமியின் செயின்ட் லூசியா

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று கடைசி இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது.

இதில் முதல் போட்டியில் டு பிளிசிஸ் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியும், பிராவோ தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்கள் சேர்த்தது.

சிம்மன்ஸ் ஆட்டமிழக்காமல் 40 பந்தில் 60 ஓட்டங்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் பிராவோ 4 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 138 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்க வீரர் ஆம்லா (6) சொதப்பினார். மற்றொரு தொடக்க வீரரான பெர்கின்ஸ் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த ராம்தின், பிரெண்டன் மெக்கல்லம் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 17 ஓவர்களிலே 2 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராம்தின் (52), மெக்கல்லம் (43) களத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும், டேரன் சமியின் தலைமையிலான செயின்ட் லூசியா சௌக்ஸ் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனால் செயின்ட் லூசியா சௌக்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களான பிளெட்சர், சார்லஸ்ஆகியோர் அதிரடியாக ஆடினர். சார்லஸ் 35 பந்தில் 64 ஓட்டங்களும், பிளெட்சர் 54 பந்தில் 70 ஓட்டங்களும் சேர்த்தனர்.

அதன்பின் வந்த வாட்சன் 17 பந்தில் 5 சிக்சர்களுடன் 42 ஓட்டங்கள் குவிக்க, செயின்ட் லூசியா சௌக்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் குவித்தது.

195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்கு அனைத்து வீரர்களும் சொதப்பினர்.

இதனால் அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் செயின்ட் சௌக்ஸ் அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒட்டுமொத்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

எதிர்வரும் 3ம் திகதி நடைபெறும் பிளே-ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ்- ஜமைக்கா தல்லாவாஸ் அணியும் மோதுகின்றன.

அதேபோல் எதிர்வரும் 4ம் திகதி நடைபெறும் 2வது பிளே-ஆஃப் சுற்றில் செயின்ட் லூசியா சௌக்ஸ்- ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Previous Post

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: மேக்ஸ்வெல் நீக்கப்பட்டது ஏன்?

Next Post

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி வீரர் அசத்தல் சாதனை!

Next Post

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி வீரர் அசத்தல் சாதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures