15 வீதமாகவுள்ள வற் வரியை 18 வீதமாக அதிகரிக்கும் சேர் பெறுமதி வரி சட்டத்தின் கீழான கட்டளை 36 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (2) சேர் பெறுமதி வரி சட்டத்தின் கீழான கட்டளையை நிறைவேற்ற எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல வாக்கெடுப்பைக்கோரினார்.
இதனையடுத்து இடம்பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பில் சேர் பெறுமதி வரி சட்டத்தின் கீழான கட்டளைக்கு ஆதரவாக 55 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 36 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
149 எம்.பிக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.