யாழ்ப்பாணம் வடமராட்சிக் கடற்பரப்பில் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடற்றொழிலாளர்கள் தொழில் நடவடிக்கைக்காக கடலுக்கு செல்கின்ற நேரம், கடலில் வைத்து அவர்களின் படகு இயந்திரம் மற்றும் தொழில் உபகரனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றன.
சோதனையின் போது படகுப் பதிவு, படகின் காப்புறுதி, தொழிலாளர்களின் ஆள் அடையாள அட்டை என்பவற்றையும் கடற்படையினர் கோரி வருகின்றனர்.

