ரெமோ படத்துக்கு எழுந்த பிரச்சனை – திரையுலகில் பரபரப்பு
சிவகார்த்திகேயனின் ரெமோ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் படத்தை பற்றி திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில் பெயர் வைக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்து வருகிறது.
இதனால் எஸ்.எம்.எஸ் படம் சிவா மனசுல சக்தி, மாஸ் என்கிற பெயர் மாசிலாமனி என மாறியிருந்தது. உதயநிதியின் கெத்து, மனிதன் படங்களுக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது.
ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படத்திற்கு, தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.
ரெமோ தமிழ் வார்த்தை இல்லை, இதற்கு எப்படி வரி விலக்கு அளிக்கப்பட்டது என தமிழ் திரைப்பட உலகில் சர்ச்சை எழுந்துள்ளது.