யாரை காதலிக்கிறீர்கள்? ஹன்சிகாவை திணறடித்த 10 ஆயிரம் கேள்விகள்
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் போகன் படத்தின் மூலம் மீண்டும் ஜெயம்ரவியுடன் இணைந்து நடித்துவருகிறார்.
ஒவ்வொரு வருடமும் தன் பிறந்தநாளை அவர் தத்தெடுத்துள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடுவார்.
இந்த வருடம் கொஞ்சம் புதுமையாக ரசிகர்களின் 25 கேள்விக்கு பதிலளிப்பதாக கூறியிருந்தார். இவர் இப்படி கூறியதும் ரசிகர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டுள்ளனர். எதில் 25 கேள்வியை தேர்ந்தெடுக்க தடுமாறி வருகிறாராம்.
ரஜினியுடன் நடிப்பீர்களா? சிம்புவுடன் மீண்டும் சேர்வீர்களா? நடிக்க விரும்பும் நடிகர்? எப்போது திருமணம்? காதல் திருமணமா? அழகின் ரகசியம் என்ன? எப்போது சிரிப்பதை நிறுத்திவிட்டு நடிக்க தொடங்குவீர்கள்? யாரை காதலிக்கிறீர்கள்? என பல கேள்விகளை கேட்டுள்ளனர்.