Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா தமிழக போலீஸ் இயங்குகிறது?

September 12, 2017
in World
0
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலா தமிழக போலீஸ் இயங்குகிறது?

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சென்னையில் அமைதிப் பேரணி நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் மனித உரிமைகளை மீறி நடந்துகொண்டனர்; அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், இதைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கை விவரம்:
’தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கக் கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், இன்றைக்கு (12.9.2017) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து கோட்டை நோக்கி பேரணி செல்வதற்கு அனுமதி பெற்று, மாணவர்கள் அமைதியாகப் பேரணியில் வந்தபோது, பேரணி முடிவதற்கு முன்பாக காவல்துறையினர் மாணவ – மாணவிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களையும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களையும் குறிப்பாக தனியாக இழுத்து தாக்குதல் தொடுத்துள்ளனர். காவல்துறையின் இந்த தாக்குதலைக் கண்டித்து பேரணியில் பங்கேற்ற மாணவிகள் அமைதியாக சாலையில் அமர்ந்து கோஷமிட்டபோது, மாணவிகளை ஆண் காவலர்கள் கைகளைப் பிடித்தும், உடைகளைப் பிடித்தும் இழுத்துள்ளனர். இதில் சில மாணவிகளின் உடைகள் கிழிந்துள்ளன. ஆபாசமான வசவுகளுடன் மாணவிகளை தகாத முறையில் தொட்டும், பிடித்துத் தள்ளியும் உள்ளனர். மாணவர்களை மாணவிகள் மீதும், மாணவிகளை மாணவர்கள் மீதும் வேகமாக இடித்துத் தள்ளியுள்ளனர்.

மாணவர்களுடைய கைகளை திருகியும், கால்களை திருகியும், பூட்ஸ் காலால் மிதித்தும், வயிற்றில் குத்தியும், விரல்களை உடைக்க முயற்சித்தும் மற்றும் மாரியப்பன், செந்தில், தீபா, தாமு, நிரூபன், சந்துரு, இசக்கி உள்ளிட்ட மாணவர் – வாலிபர் தலைவர்களை மிகக் கடுமையாகத் தாக்கியதோடு, அவர்கள் தங்களுடைய கைபேசியை காணோம் என்று தெரிவித்தபோது, “கைபேசி மட்டுமல்ல நீயும் சிறிது நேரத்தில் காணாமல் போகப் போகிறாய்” என்று வெறித்தனமாக மிரட்டியுள்ளனர். காவல்துறையின் இந்த தாக்குதலில் மாணவிகள் சிலரும் காயமடைந்துள்ளனர். இவையனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கடும் குற்றங்களாகும். காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத அத்துமீறல் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

சட்டப்பேரவையில் ஒருமனதாக அவசர சட்டம் இயற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்த நிலையில் பலதரப்பு மக்களும் அவசர சட்டத்துக்கு அனுமதி கோரி போராடிக் கொண்டிருக்கும்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள் மீது இத்தகைய காட்டுமிராண்டித் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருப்பது தமிழக காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? அல்லது மத்திய பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் இயங்குகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

காயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டுமென்றும், கைதுசெய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். மனித உரிமை மீறல்கள் புரிந்த காவலர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதும் தான் இப்பிரச்னைக்கு தீர்வாகும். மாறாக, போராட்டங்களை ஒடுக்குவதாலோ, போராடுபவர்களை அச்சுறுத்துவதாலோ தமிழக மக்களின் – மாணவர்கள், இளைஞர்களின் கொந்தளிப்பை அடக்கிவிடமுடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது” என்று ராமகிருஷ்ணன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Previous Post

சசிகலாவை நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் இவர்தான்!

Next Post

பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு வீசிய இளம்பெண்

Next Post
பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு வீசிய இளம்பெண்

பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு வீசிய இளம்பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற தீவிர முயற்சி : அமைச்சர் அறிவிப்பு

September 23, 2026
ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகும் இதிகாச கொடை வள்ளல் கர்ணனின் காவிய வாழ்க்கையான ‘மகாவீர் கர்ணா’

ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகும் இதிகாச கொடை வள்ளல் கர்ணனின் காவிய வாழ்க்கையான ‘மகாவீர் கர்ணா’

September 23, 2026
கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே முறுகலை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்க வேண்டும்

September 22, 2026
2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

2026 ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை மகளிர் கிரிக்கெட் அணி வென்றுகொடுத்தது; இந்தியாவுக்கு தங்கம்

September 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures