மதுபோதையில் இலங்கை வீரர் செய்த காரியம்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ரமித் ரம்புக்வெல்ல கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், அவரை கைது செய்து பின்னர் பிணையில் விடுதலை செய்தனர்.
இந்த வழக்கில் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் 29 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளது.
ரமித் ரம்புக்வெல்ல முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.