மகள் திருமணத்திற்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த ராதிகா
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்- ராதிகா சரத்குமார் ஆகியோர் தங்களது மகள் ரேயானின் திருமண அழைப்பிதழை தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ரேயான், சென்னையில் உள்ள ராடான் டிவியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அபிமன்யூ மிதுனை ரேயான் திருமணம் செய்ய உள்ளார். அபிமன்யூ இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபிமன்யூ விளையாடி வருகிறார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் திகதி நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை குடும்பத்துடன் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார் சரத்குமார்.