பாரா ஒலிம்பிக் போட்டியில் நடந்த விபரீதம்: மரணமடைந்த வீரர்!
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கின் ஒரு போட்டியாக, கரடுமுரடான பாதைகளில் சைக்கிள் ஓட்டும் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத்(48) , தனது சைக்கிளை வேகமாக மிதித்தபடி சென்றார்.
ஒரு குறுகிய வளைவில், எதிர்பாராதவிதமாக இன்னொரு சைக்கிள் மீது அவரது சைக்கிள் மோதியதில், நிலைகுலைந்து தரையில் சாய்ந்த இவர் நெஞ்சுவலியால் துடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஈரான் ஒலிம்பிக் கிராமத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.