தென் சீனக் கடல் தொடர்பில் முக்கிய தீர்ப்பு
தென் சீனக் கடல் பிராந்தியத்தின் உரிமை தொடர்பில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் நிலவிய சர்ச்சை குறித்து சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பொன்றை அளித்துள்ளது.
நெதர்லாந்தில் ஹேக் நகரில் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு அமைப்பான நிரந்தர நடுவர் நீதிமன்றமானது சீனா வரலாற்று ரீதியாக அந்த நீர்ப்பரப்பிலுள்ள வளங்களின் கட்டுப்பாட்டை உரித்துடைமையாகக் கொண்டிருந்ததற்கு சான்று எதுவும் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேற்படி தீர்ப்பிற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.
இந்தத் தீர்ப்பானது பிலிப்பைன்ஸுக்கு முக்கியத்துவம் மிக்க வெற் றியாக கருதப்படுகிறது.