திருடுபோன பாஸ்போர்ட் – தீவில் தவித்த எந்திரன் 2 நாயகி
தமிழ் சினிமாவில் மதராசப்பட்டினம் மூலம் அறிமுகமான இங்கிலாந்து மாடல் எமி ஜாக்சன்.
ஐ, தெறி என பிரபல நடிகர்களின் படங்களில் நடித்த இவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்புக்கு இடைவெளி இருப்பதால் ஸ்பெயினில் உள்ள இபிஸா தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
சென்ற இடத்தில் பாஸ்போர்ட், விசா உட்பட முக்கியமான பொருட்கள் வைத்திருந்த இவரது கைப்பை திருடப்பட்டதாம். அதிர்ச்சியடைந்த எமி அங்குள்ள போலிசில் புகார் தெரிவித்தபின் ஸ்பெயின் தூதரகத்திலும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து எமியின் லேப்டாப்பிலிருந்த பாஸ்போர்ட் காப்பியை சரிபார்த்து இங்கிலாந்து தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவரை அனுப்பிவைத்துள்ளனர்.