தற்கொலைகளுக்கு தூண்டுதலாக அமையும் தேசிய பிரச்சனைகள்

தற்கொலைகளுக்கு தூண்டுதலாக அமையும் தேசிய பிரச்சனைகள்

ஒன்ராறியோவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வூட்ஸ்ரொக் நகரின் உயர்தரப் பாடசாலையில் கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்துள்ள நிலையில் குறித்த பாடசாலை மாணவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தற்கொலை செய்துகொண்டுள்ள மாணவர்கள் விடயத்தில் குறித்த பாடசாலை அமைப்பு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என தெரிவித்தே மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வகுப்புக்களிலிருந்து வெளிநடப்பு செய்த மாணவர்கள், பலவீனமானவர்களை கொடுமைப்படுத்துதலே மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் எனவும் போதுமான விழிப்புணர்வு மற்றும் உதவிகள் பாடசாலை திட்டத்தில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மாணவர்களின் வெளிநடப்பு ஒரு சக்தி வாய்ந்த செய்தியை பாடசாலை அமைப்புக்கு அனுப்பும் எனவும் கூறினர்.

அத்துடன், பாடசாலை அமைப்புக்களும் கனேடிய மனநல சங்கமும் இவற்றிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தேசிய பிரச்சனைகள் இளைஞர்களின் தற்கொலைகளுக்கு தூண்டுதலாக அமைவதாக ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

College Avenue Secondary School, Ecole secondaire Notre Dame, Huron Park Secondary School, St. Mary’s Catholic High School, and Woodstock Collegiate Institute ஆகிய ஐந்து உயர்தர பாடசாலைகளில் இந்த வருட ஆரம்பத்திலிருந்து இது வரை 36 பேர்கள் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்தியும், தற்கொலை முயற்சிகளிற்கு எத்தனித்தும் உள்ளதாக வூட்ஸ்ரொக் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News