Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவு! தீர்ப்பு ஒத்திவைப்பு

June 7, 2016
in News, Politics
0
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவு! தீர்ப்பு ஒத்திவைப்பு

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவு! தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து, கர்நாடக அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த பெப்ரவரி 23ம் திகதி தொடங்கியது. கடந்த வாரம் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.

மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு நிறுவனங்கள் தங்கள் வாதங்களை இன்று முன்வைத்தன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருப்பதால், நீதிபதி பி.சி. கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வரும் 10ம் தேதிக்குள் எழுத்து மூலமான தங்கள் வாதங்களை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நீதிபதிகள் கூறினர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 1991 – 96 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு பொருந்தாத வகையில் 67 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்களைச் சேர்த்தார் என தொடரப்பட்ட வழக்கு கர்நாடக மாநிலத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

2014 செப்டம்பரில் இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த மேல் முறையீட்டில் ஜெயலலிதாவும் மற்றையோரும் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, தற்போது ஜெயலலிதா வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூட அநேகமாக ஆகஸ்ட் மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Featured
Previous Post

பிரித்தானிய நாட்டின் கொடூர குற்றவாளி: 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

Next Post

ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

Next Post
ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

August 19, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிரிழப்பு; சம்பவத்தை கண்ட இரு மாணவிகள் மயங்கி வைத்தியசாலையில் அனுமதி

August 19, 2026
அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கௌரவமாக நாடு திரும்புவதற்கான சூழலை அரசு உருவாக்கவேண்டும் – சாணக்கியன் 

August 19, 2026
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் அனைத்துலக மாநாடு ஏற்பாடு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் அனைத்துலக மாநாடு ஏற்பாடு

August 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures