செய்திஎச்சரிக்கை: ஐந்து வயது சிறுமியை காணவில்லை. தாய் இறந்து கிடந்தார்!.
கனடா-கல்கரியில் ஐந்து வயது சிறுமியை காணவில்லை என்ற காரணத்தால் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இச்சிறுமியின் தாயார் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என கல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்கரியில் பனாமௌன்ட் வடமேற்கு பகுதி சுற்றுவட்டாரத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 8.30மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டனர்.வீடு ஒன்றில் வசித்த பெண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என கவலை கொண்ட உறவினர் பொலிசாரை அழைத்துள்ளனர்.
வீட்டின் உள்ளே சென்ற பொலிசார் 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டினுள்ளே இறந்து கிடக்க கண்டு பிடித்தனர்.
இவரது மகள் ராலியா லே மாஸ்மன் அப்பகுதியில் இருந்து அறிமுகமற்ற நபர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர்.
ராலியா ஒரு கலப்பு-இன சிறுமி என்றும் மெல்லிய தோற்றமுடைய பிறவுன் நிற சுருள் முடியும் பிறவுன் நிற கண்களும் கொண்டவர் என விபரிக்கப்பட்டுள்ளாள்.சிறுமியை காணவில்லை என அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராலியா