சென்னை பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டிப்போட்ட படங்கள்- முதலிடம் யாருக்கு?
தமிழகத்தை பொறுத்தவரை சென்னை பாக்ஸ் ஆபிஸ் என்பது பெரிய வசூல் தரும் இடம். அந்த வகையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தில்லுக்கு துட்டு, பாலிவுட் படமான சுல்தான் களம் கண்டது.
இதில் தில்லுக்கு துட்டு ஒரு சில லட்சம் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்துள்ளது, ரூ 1.48 கோடி வசூல் செய்துள்ளது, சுல்தான் ரூ 1.29 கோடி வசூல் செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ஒரு தமிழ் படத்திற்கு இத்தனை கடும் போட்டி கொடுத்த முதல் பாலிவுட் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2 வார முடிவில் ஜாக்சன் துரை ரூ 1.42 கோடி வசூல் செய்ய, அப்பா படம் ரூ 54 லட்சம் வசூல் செய்துள்ளது.