சிவகார்த்திகேயனை டார்ச்சர் செய்தது இந்த பிரமாண்ட தயாரிப்பாளர் தானா? கசியும் தகவல்
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறார். ஆனால், நேற்று இவர் ரெமோ நன்றி விழாவில் பேசியது அனைவரையும் உலுக்கியது.
எங்களுக்கு உதவி செய்யவில்லை என்றால் கூட பரவாயில்லை, வேலையை செய்ய விடுங்க என்று கூறினார். யார் இவரை தொந்தரவு செய்வது என்று பல பேச்சுகள் எழுந்துள்ளது.
பலரும் முதலில் நடிகர்கள் என்று கூறினாலும் தற்போது ஒரு பிரமாண்ட தயாரிப்பாளர் பெயர் இதில் அடிப்படுகின்றது.
உச்ச நடிகர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தை வெளியிட விரும்பியுள்ளார். ஆனால், ரெமோ கைமீறி வேறு ஒருவருக்கு சென்றுள்ளது.
இதன் காரணமாக தான் இந்த படத்திற்கு இத்தனை பிரச்சனை எழுந்துள்ளது என கிசுகிசுக்கப்படுகின்றது.