இரண்டு உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்குமாறு டோனிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய வீரர் மகேந்திர சிங் டோனி பல்வேறு முன்னணி நிறுவனங்களில் விளம்பர தூதராக உள்ளார்.
உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள SWPL என்ற நிறுவனத்தின் தூதராக டோனி இருந்து வருகிறார்.
இந்நிலையில் SWPL-ன் போட்டி நிறுவனமான Fit7-ன் விளம்பர தூதுவராக டோனி நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Fit7 நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலமாக, SWPL நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை டோனி மீறிவிட்டதாக விகாஸ் அரோரா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக டோனி மீது SWPL எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் கூறியிருந்தார்
அரோராவின் மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு டோனி மற்றும் SWPL நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.