காணாமல் போன ஐந்து வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரமான முடிவு.

காணாமல் போன ஐந்து வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரமான முடிவு.

கனடா-வெள்ளிக்கிழமை புலன்விசாரனையாளர்கள் கல்கரியின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராம புற பகுதிக்கு செல்ல உள்ளனர். அம்பர் எச்சரிக்கை விடப்பட்டிருந்த காணாமல் போன ஐந்து வயது சிறுமியின் உடல் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக மேலதிக விசாரனை நடாத்துவதற்காக அங்கு செல்கின்றனர்.
காணாமல் போன இச்சிறுமியின் தாய் 34-வயதுடைய சாரா பெய்லி அவரது வீட்டில் திங்கள்கிழமை இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் அல்பேர்ட்டாவில் செஸ்ட்மியர் பகுதியில் கிராமப்புற வீதிக்கருகில் உள்ள புலம் ஒன்றில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
46வயதுடைய எட்வேட் டெலரன் டவுனி என்பவர் மீது இரு கொலை குற்றங்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றச் செய்கைகளிற்கு பெய்லி முக்கிய இலக்காக இருந்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.சிறுமி ராலியாவின் மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகின்றது.
ராலியா ஞாயிற்றுகிழமை கடைசியாக காணப்பட்டாள். அந்நாளின் பிற்பகுதியில் தாயாருடன் Dairy Queen ல் இருந்தது பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
அடுத்த நாள் காலை ராலியாவின் தோற்றமுடைய சிறுமி ஒருத்தி கையில் சூட்கேசுடன் அவர்களது வீட்டிற்கு அருகாமையில் மனிதன் ஒருவனுடன் நின்றதும் தெரியவந்துள்ளது.
பெய்லி வேலைக்கு செல்லவில்லை என தெரிந்ததும் உறவினர்கள் பொலிசாருடன் தொடர்பு கொண்டனர்.
திங்கள்கிழமை இரவு சாராவின் உடலை பொலிசார் கண்டு பிடித்ததும் சிறுமி குறித்து அம்பர் எச்சரிக்கையை அமுல்படுத்தினர்.
புதன்கிழமை சந்தேக நபர் ஒருவர் காவலில் எடுக்கப்பட்டார்.இந்நபர் ஆரம்பத்தில் பொலிசாருடன் ஒத்துழைக்கவில்லை. பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஒத்துழைப்பை வழங்கினார்.
இம்மனிதன் பரந்த அளவிலான குற்ற பின்னணி கொண்டவரென அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிம்மொன்ஸ் என்ற இறுதிப்பெயர் கொண்ட இந்த நபரான டவுனிக்கு சிறுமியையும் அவளது பெற்றோர் இருவரையும் தெரியும் என பொலிசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் கடந்த மூன்று நாட்களாக 100 அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றியுள்ளனர்.
இந்த இழப்பு அனைவரையும் பாதித்துள்ளது.
சிறுமியை தேடும் முயற்சி இதயத்தை நொருக்கும் விதத்தில் முடிவுற்றதால் தாய் மற்றும் மகளை அறியாதவர்கள் மற்றும் அறிந்தவர்களின் வருத்தத்தின் வெளிப்பாடு குவிந்த வண்ணம் உள்ளது.
அல்பேர்ட்டா முதல்வர் றேச்சல் நோட்லி கல்கரி மேயர் நஹீட் நென்ஷி ஆகியவர்கள் தங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

mur2mur4mur1mur

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
Easy24News

Recent News