களைகட்டப் போகும் கனடாவின் 149வது பிறந்த நாள்: முதன்முறையாக Scarboroughல் நடக்கும் 2 நாள் கனடா தின கொண்டாட்டம்

களைகட்டப் போகும் கனடாவின் 149வது பிறந்த நாள்: முதன்முறையாக Scarboroughல் நடக்கும் 2 நாள் கனடா தின கொண்டாட்டம்

கனடாவின் 149வது பிறந்த நாள் தினத்தையொட்டி முதன்முறையாக Scarboroughல் 2 நாள் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யூலை 1 மற்றும் 2ம் திகதிகளில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், இந்த அழகான தேசம் மீது 100 புதிய கனேடியர்களை வரவேற்கும் நிகழ்வை தொடர்ந்து பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு உணவுகளை அனுபவிக்க முடியும்.

நாங்கள் இந்தாண்டு கனடா தினத்தை கொண்டாடவிருப்பது சிலிர்ப்பாக இருப்பதாக மேயர் ஜான் டோரி கூறியுள்ளார்.

மேலும், “தொம்சன் நினைவுப் பூங்காக்களில் குடும்ப நிகழ்வுகள், நீண்டகால scarborough கனடா தின அணிவகுப்பு, பல்வேறு சமூக கூட்டங்கள், கலாச்சார கொண்டாட்டங்கள், உணவு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்” என்று தெரிவித்தார்.

நாங்கள் கனடா தின கொண்டாட்டத்தில் சமுதாய நலன்கள் மீதும் அக்கறை கொண்டுள்ளதாக 41வது வார்டு கவுன்சிலர் Chin Lee தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், Scarborough பல்வேறு கலாச்சாரங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. இந்த நிகழ்வு கனடா நாட்டின் மீதுள்ள அன்பை மட்டும் கொண்டாவது அல்ல. அனைத்து கலாச்சாரங்களை கொண்டாடுவது என்று தெரிவித்தார்.

civic மையம், ஸ்கார்பரோ டவுன் மையம், ரொறன்ரோ 100வது நூலகம் மற்றும் ஆல்பர்ட் காம்ப்பெல் சதுக்கம் ஆகியவை விரைவில் புத்துயிர் திட்டங்களில் உள்ளன.

இதனால் இந்த ஆண்டு Scarboroughல் நடக்கும் கனடா தின கொண்டாட்டத்தை விட அடுத்த வருடம் கொண்டாடப்படும் 150வது கனடா தினத்தில் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

இதில் Vision 360 Entertainment நடத்தும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளுடன் ஒய்.எம்.சி.ஏ. Kids Zone, ஊதப்பட்ட பலூன் சவாரிகள், Brave T.O. Challenge, கார் ஷோ என பல பொழுது போக்கு அம்சங்கள் இடம்பெறுகிறது.

ஸ்பான்சர்ஷிப் வருமானத்தில் ஸ்கார்பரோ மருத்துவமனை அறக்கட்டளை மற்றும் ஒய்.எம்.சி.ஏ.பயனடைவார்கள்.

இந்த கொண்டாட்டம் Albert Campbell Squareல் யூலை 1 மற்றும் 2 திகதிகளில் பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நடைபெறும்.

மேலும், தகவல்களுக்கு க்ளிக் செய்யவும்

இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்குகிறது. உங்கள் நிகழ்வுக்கும் ஊடக அனுசரணை வழங்க விரும்பினால் [email protected] மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News